சமூகப் பங்களிப்புடன் தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி ‘அத்தம’ தேசிய கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பம்
 
“ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், நாட்டின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் இன்று (08.08.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கரைச்சி உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், 551ஆவது படைப்பிரிவின் அதிகாரி திரு. அனுர பண்டார, 11ஆவது கஜபாகு படையணியின் அதிகாரி திரு. சஞ்சய பண்டார, clean Sri Lanka  பிரதேச இணைப்பாளரும் கெளரவ பிரதேசசபை உறுப்பினருமான திரு. கே.சஜீவன், கெளரவ பிரதேசசபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி சபையின் கெளரவ தலைவர்,அரச உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.WhatsApp Image 2026 08 08 at 17.14.11
 
WhatsApp Image 2026 08 08 at 17.14.12
WhatsApp Image 2026 08 08 at 17.14.14
WhatsApp Image 2026 08 08 at 17.14.16
WhatsApp Image 2026 08 08 at 17.14.16 1
WhatsApp Image 2026 08 08 at 17.14.17

News & Events

09
ஆக2026
 ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு

‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு

சமூகப் பங்களிப்புடன் தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி...

Scroll To Top